பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உறுப்பினர் மற்றும் சிறப்பு அழைப்பின் பேரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இந்தியா வந்து உள்ளனர். 
செய்திகள்

தில்லியில் ஜி 20 உச்சி மாநாடு கோலாகல தொடக்கம் - புகைப்படங்கள்

உலகின் சக்தி வாய்ந்த, பொருளாதாரத்தை கட்டியெழுப்புகின்ற மிக முக்கிய நாடுகளான இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை கொண்ட அமைப்பாக ஜி20 திகழ்கிறது.உலப் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் இந்த நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் உறுப்பினர் நாடுகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சர்வதேச தலைவர்கள் கலந்து கொள்ளும் ஜி20 உச்சி மாநாடு இன்றும் (செப். 9) நாளையும் (செப். 10) தலைநகர் தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது.

DIN
பொருளாதாரம், மருத்தும் மற்றும் சுகாதாரம், சுற்றுச்சுழல், வணிகம் சார்ந்தது மற்றும் தொழில்நுட்பத்தின் உலக பார்வை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நாட்டின் 40க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜி20 நடைபெற்றது.
கூட்டங்களில் உறுப்பு நாடுகளின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்றும் (செப். 9) நாளையும் (செப். 10) தலைநகர் தில்லியில், ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகிறது.
பசுமை எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்ள தேவையான முயற்சிகள் குறித்து உறுப்பு நாடுகளின் தலைவர்கள் விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகை மீரா வாசுதேவன் 3-வது முறையாக விவாகரத்து!

2026-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் 10 திரைப்படங்கள்! முழு விவரம்!

6 ஆண்டுக்கு பிறகு சீனாவுக்கு விமான சேவையை தொடங்கும் ஏர் இந்தியா!

வலுவான இந்திய அணி சொந்த மண்ணில் தோற்க காரணம் என்ன? புஜாரா கேள்வி!

எஸ்ஐஆர் - ஒரு கோடி பேர் வாக்குரிமை இழப்பர்: சீமான்

SCROLL FOR NEXT