2024 மக்களவைத் தேர்தல் முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் சென்னை திமுக அலுவலகத்தில் சந்திப்பு.
அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.மக்களவைத் தேர்தலையொட்டி திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்.திமுக - மக்கள் நீதி மய்யம் இடையேயான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை மாறாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.