சென்னை, ஜன. 10 - தமிழ்நாடு அசெம்பிளி தி.மு.க. உறுப்பினர் திரு. எஸ். ராமநாதன் அண்ணா தி.மு.க. வில் சேர்ந்துள்ளதாக அண்ணா தி.மு.க. அலுவலகம் வெளியிட்ட பத்திரிகைக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அறந்தாங்கித் தொகுதியைச் சேர்ந்த திரு. ராமநாதன் அண்ணா தி.மு.க. வில் சேருவதாக திரு. எம்.ஜி. ராமச்சந்திரன் அப்பத்திரிகைக்குறிப்பில் கூறியுள்ளார்.
இவரையும் சேர்த்து, மாநில சட்டசபையில் அண்ணா தி.மு.க. வின் பலம் 18 ஆக உயருகிறது.
புதுடில்லி, ஜன. 10 - மறைத்த வருமானம், சொத்து முதலியனவற்றை சுயமாக முன்வந்து அறிவித்த நபர்கள், அவ்வாறு அறிவித்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள், நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் 5 ¾ சத வட்டி தரும் 1985 இந்திய அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யத் தவறினால் அவர் அறிவித்தது செல்லா தாக்கப்படும் என்று இன்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மறைத்த வருமானம், சொத்து முதலியனவற்றை தாமாக முன்வந்து அறிவிக்குமாறு பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தின் (1) பிரிவுப்படி அறிவிக்கப்பட்டிருக்குமானால், அவ்வாறு வெளியிடப்பட்ட தொகையில் 4 சதம் அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட வேண்டும். அந்த அவசரச் சட்டத்தின் 15 (1) பிரிவின்படி அறிவிக்கப்பட்டிருக்குமாயின், வெளிப்படுத்தப்பட்ட மொத்தத் தொகையில் 2.5 சதம் அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வரி விதிப்பு ஆண்டுகளுக்கான அறிவிப்பாயின் கடைசி வரி விதிப்பு ஆண்டுக்கு தெரிவிக்கப்பட்ட நிகர சொத்து மதிப்பு அல்லது நிகர வருமான தொகை அடிப்படையில் அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட வேண்டும்.
அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்த தகவலை சம்பந்தப்பட்ட வருமான வரி கமிஷனருக்குத் தெரிவிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.