தம்பதிகள் இருவரும் முதல் ஒரு மாதங்கள் தினம், காலை ஒரு வேளை உணவை பழம், காய்கறிகள் சாலட், ஜூஸ் போன்றவையாகச் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
இதில் ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, செவ்வாழை, பிஸ்தா, மாதுளை, தர்பூசணி, மாம்பழம், கொய்யா, திராட்சை, முந்தி, பேட்சை, தக்காளி, வேர்க்கடலை, கேரட், வெண்டை, பாதாம், வெள்ளக்காய், தேங்காய், இளநீர் மற்றும் பழ ஜூஸ்கள், காய்கறி சாலட் போன்றவற்றில் ஏதேனும் இரண்டு மூன்று வகைகளை தேவையான அளவு சாப்பிடுவது நல்லது.
மற்ற இரண்டு நேரம் சமைத்த உணவுகள் சாப்பிடலாம். இவற்றில் 50 சதவீதம் வேக வைத்த காய்கள், கீரைகள், இருக்குமாறு சாப்பிடவும். மண் பாத்திரத்தில் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
ராகி, கோதுமை, கம்பு, சோளம் போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது. விருப்பமுள்ளவர்கள் தினம் காலை, மாலை இயற்கை உணவை சாப்பிடலாம். இது மிகச் சிறந்த பலனைத்தரும்.
இவர்கள் இரவு உணவை மட்டும் எட்டு மணிக்குள் முடிக்க வேண்டும். தினம் அதிகபட்சம் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வாரம் ஒரு நாள் ஒரு வேளை உணவைத் தவிர்க்கவும்.
முருங்கைக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி, வாழைத்தண்டு, வாழைப்பூ, வெண்பூசணி, முட்டைகோஸ், புடலங்காய், சுரக்காய், சிறிய வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, வெந்தயம், மிளகு, சீரகம் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.
இந்த உணவுகள் மலட்டுத்தன்மையைப் போக்கும். புத்துணர்ச்சி அளிக்கும். இனப் பெருக்க உறுப்புகள் வலுப் பெற உதவும். இதனால் கருத்தக்கும் வாய்ப்புகள் அதிகக்கும்.
உடற்பயிற்சிகள்:
யோகாசனம், நடத்தல், நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவை உடலுக்கு சக்தியையும், ஆரோக்கியத்தையும் தரும். புத்துணர்ச்சி அளிக்கும். சோம்பலைப் போக்கும். ரத்த ஓட்டம் அதிகக்கும். மன மகிழ்ச்சி கூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.