ஆஸ்துமா என்பது மூச்சுக் குழாய்கள் மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்னை. கோபம், எரிச்சல், பரபரப்பு, புழுதி போன்றவை ஆஸ்துமாவுக்குக் காரணமாகிவிடலாம். சில நேரங்களில் சுவாச உறுப்புகளில் ஏற்படும் கிருமித் தொற்று, அதிக உடற்பயிற்சி, குளிர்ந்த காற்று, கடல் காற்று, குளிர்ந்த நீர், பீடி, சிகரெட்டிலிருந்து வரும் புகை, சில வாசனைகள், மலர்களின் மகரந்தப்பொடி, மன அழுத்தம், மன உளைச்சல், ஆயாசம், ஆவேசம் மறறும் சிலவகை உணவுப் பொருள்கள் அல்லது மருந்துகள் போன்றவையும் ஆஸ்துமாவை உடனே தூண்டி விட வாய்ப்பு உண்டு.
இந்த நிலையில் நுரையீரலுக்குள் செல்லும் சுவாசக் குழாய்கள், காற்றுக் குழாய்கள் மற்றும் காற்றுப் பைகளின் தசைகள் இறுகி விறைப்பு ஏற்படுகின்றன. இதனால் நமது சுவாசத்தின்போது காற்று நுரையீரலுக்குள் செல்வதிலும் வெளியேறுவதிலும் சிரமம் ஏற்படுகிறது.
அப்போது இரைச்சல் (வீசிங்) ஏற்படுகிறது. பிசுபிசுப்பான சளியும் அதிகரிக்கிறது. இருமல், தும்மல் ஏற்படக்கூடும். அதனுடன் சளியும் வெளியேறும். சில சமயம் காய்ச்சல் ஏற்படக்கூடும். இரவு நேரங்களில் ஆஸ்துமா ஏற்பட்டு, மூச்செடுப்பதில் மிகுந்த சிரமம் இருக்குமானால் கவனமாக இருப்பது நல்லது.
விறைப்படைந்த மூச்சுக்குழாய், காற்றுப் பாதைகளை இலகுவாக்கும். சளியைத் திரட்டி வெளியேற்றும் மருந்துகள் எடுத்துக்கொண்டால் நிவாரணம் கிடைக்கலாம். ஆஸ்துமா ஏற்பட்ட நிலையில் மூச்சுவிடுவதில் அதிகப்படியான சிரமம், உதடுகள்- முகம் நீல நிறமடைவது, அதிக நாடித் துடிப்பு, அதிகமாக வியர்த்தல், இருமலின்போது ரத்தம் கலந்த சளி வெளிப்படுதல், நெஞ்சு வலி, சற்று நேரத்துக்கு மூச்சடைத்தல், நெஞ்சுப் பகுதியில் இறுக்கம், தாறுமாறான சுவாசம் போன்ற அறிகுறிகள் இருப்பின் மிகுந்த எச்சரிக்கை தேவைப்படுகிறது. உடனே மருத்துவரின் உதவியை நாடுவது அவசியம்.
ஹோமியோபதி மருத்துவத்தில் சிறப்பான பல மருந்துகள் உள்ளன. ஆஸ்துமாவைப் பொருத்தவரை ஹோமியோபதி மருந்துகள் நல்ல பலனைத் தருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.