மருத்துவம்

ரத்த சோகையைத் தடுக்க இளம் பெண்களுக்கு மாத்திரைகள்

ரத்த சோகையைத் தடுப்பதற்காக 10-19 வயதுக்கு உள்பட்ட 13 கோடி வளரிளம்பெண்களுக்கு வாரம் தோறும் இரும்புச் சத்து மாத்திரை வழங்க மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

தினமணி

ரத்த சோகையைத் தடுப்பதற்காக 10-19 வயதுக்கு உள்பட்ட 13 கோடி வளரிளம்பெண்களுக்கு வாரம் தோறும் இரும்புச் சத்து மாத்திரை வழங்க மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

இளம்பெண்கள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்படுவதைத் தடுத்த நாடு முழுவதும் உள்ள 13 கோடி வளரிளம் பெண்களுக்கு இரும்புச் சத்து மாத்திரை (ஐஎஃப்ஏ) வழங்கப்படும். அடுத்த 3 மாதங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

பள்ளிகளில் பயிலும் 6 கோடி மாணவிகள், பள்ளிக்கு வெளியே 6-7 கோடி வளரிளம் பருவ பெண்களுக்கு வாரம் தோறும் திங்கள்கிழமை மதிய உணவுக்குப் பின் எடுத்துக் கொள்ளும் வகையில் மாத்திரை வழங்கப்படும். இது தவிர, 6 மாதங்களுக்கு ஒரு முறை குடல் புழு நீக்கம் செய்வதற்கான அல்பெண்டாஸோல் (Albendazole) (400 மில்லிகிராம்) மாத்திரை வழங்கப்படும்.

13 வயதில் இருந்து 19 வயதுக்கு உள்பட்ட பெண்கள், போதிய இரும்புச் சத்தை உட்கொள்வதை உறுதிப்படுத்த, சரியான உணவு முறையைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுவர்.

யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து 1990ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறார் வாழ்வு மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. வரும் பிப்ரவரி 7ஆம் தேதி இது தொடர்பான கருத்தரங்கு சென்னையில் தொடங்குகிறது என்று தேசிய ஊரக சுகாதாரத் திட்ட இயக்குநர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT