செய்திகள்

தோலில் காணப்படும் கரும்படை அகல இது உதவும்!

உடல் உறுப்புகளில் வலி, சுளுக்கு இவை தீர, வாதநாராயணன் (வாதமடக்கி) இலை, பேய் மிரட்டி இலை,

தினமணி

உடல் உறுப்புகளில் வலி, சுளுக்கு இவை தீர, வாதநாராயணன் (வாதமடக்கி) இலை, பேய் மிரட்டி இலை, நொச்சிவேர் ஆகியவைகளைச் சேர்த்து அரைத்து, நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி, வலியுள்ள இடங்களில் தடவினால் வலிகளும், சுளுக்குகளும் குணமாகும். 

பிரசவமான பெண்களுக்கு அடி வயிற்றில் வலியிருந்தால், முடக்கறுத்தான் (முடக்கத்தான்) இலையை நன்றாக அரைத்து, அடி வயிற்றில் பற்றுப் போட்டால் வலி தீரும்.

கீழே விழுந்து அடி பட்டதால் ஏற்படும் வீக்கம், வலி இவை தீர, முடக்கறுத்தான் (முடக்கத் தான்) இலையை நன்றாக அரைத்து, நல்லெண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி, இளஞ்சூட்டில் தேய்த்தால் வலி, வீக்கம் மறையும். 

கல்யாணமுருங்கை இலையை அரைத்துப் பிழிந்து சாறாகவோ, இலைகளை கீரை மசிய லாகவோ செய்து சாப்பிட்டால், சீதபேதி, சிறுநீர் எரிச்சல், வயிற்று வலி, கீல்வாதம் ஆகியவை குணமாகும். பெண்களுக்குத் தாய்ப்பால் பெருக இது ஓர் அருமருந்து.

அன்னாசிப் பழ இலையை சாறு பிழிந்து அருந்தினால், வாந்தி, வயிற்றுக்கடுப்பு, காமாலை போன்ற பித்த நோய்கள் அகலும்.

ஒரு டம்ளர் பாலுடன், இரண்டு ஸ்பூன் இஞ்சிச் சாற்றைக் கலந்து, பனங்கற்கண்டு சேர்த்து இரவு படுக்கப் போகுமுன் அருந்தினால் பித்த மயக்கம் தீரும். 

சின்ன வெங்காயம், கடுகு இரண்டையும் சேர்த்து அரைத்து, வலியுள்ள மூட்டுக்களில் தட வினால், மூட்டு வலி குணமாகும்.

தூதுவளை இலையைக் கஷாயம் செய்து, அதில் தேன் கலந்து அருந்தினால், சளித் தொல்லை தீரும். ஆஸ்துமா, பிரைமரி காம்ப்ளக்ஸ் போன்ற நோயிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.

வெகு நாட்களாக ஆறாத புண்கள் விரைவில் ஆற, மஞ்சளையும், வேப்பிலையையும் சேர்த்து அரைத்துத் தடவலாம்.

தோலில் காணப்படும் கரும்படை நோய் தீர, கசகசாவை எலுமிச்சைச் சாறுவிட்டு அரைத்து தடவினால் பலன் கிடைக்கும். 

மாங்கொட்டையிலுள்ள பருப்பைக் காயவைத்துத் தூளாக்கி, ஒரு ஸ்பூன் தூளுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி, ரத்தபேதி, மூல நோய் குணமாகும்.
- கிரிஜா நந்தகோபால், திருச்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல்: பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT