சத்துக்கள் : புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்துவகை `பி' காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் இருக்கின்றன .
தீர்வு : தேங்காயை அரைத்து பால் (100 மில்லி) அளவு எடுத்து அதனுடன் வெங்காயத் தாள் , பொடுதலைக் கீரை , வெந்தயம் இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தேங்காய் பாலுடன் கலந்து காலை மாலை என இருவேளையும் குடித்து வரவும்.
தினமும் இருவேளை தேங்காய் பால் தலா (100 மி.லி) அல்லது கொப்பரைத் தேங்காய் எவ்வளவு சாப்பிட முடியுமோ சாப்பிட்டு வரவும். இதனோடு ஆகாயத் தாமரை இலையை அரைத்து வெளிமூலம், மூலக்கட்டி (பெளத்திரம்) ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் அவை விரைவில் குணமாகும்.
குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.