உணவே மருந்து

உணவுப் பண்டங்களின் மீது ஸ்டிக்கர் நல்லதா கெட்டதா?

மாலதி சந்திரசேகரன்

இன்றைய நாட்களில், எந்த உணவுப் பதார்த்தத்தையும்  தைரியமாக சாப்பிட முடிவதில்லை. எதில் என்ன  கலப்படம் செய்திருப்பார்களோ என்கிற பயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மாம்பழ சீசன். இப்பொழுது சாப்பிடா விட்டால், அப்புறம் கிடைக்காது. அந்த நிலமையிலும் கூட எத்தனை பேர்கள் தைரியமாகப் பழத்தை வாங்குகிறார்கள்? 

பழக்காரரிடம்,  'நல்ல பழமா? இயற்கையா பழுத்ததா? கல்லு வச்சு பழுக்க வச்சதா? உரம் போட்டதா?' என்று கேள்விக் கணைகளை தொடுத்து விட்டு, அவர் சொல்லும், 'தோட்டத்துப் பழம்தான். தைரியமா வாங்கிங்கிட்டுப் போங்க. காலையிலேந்து எத்தனை பேரு என்கிட்ட வாங்கியிருக்காங்க தெரியுமா?’என்று சொல்வதை நம்பி, வாங்கும் நிலைக்கு ஆளாகி இருக்கிறோம். 

சரி,  பெரிய கடைகளில் வாங்கலாம் என்றால், பழங்களின் மேல் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர், வேறுவிதமாக பயமுறுத்துகிறது. 'ஸ்டிக்கரை ஷோவுக்காக ஒட்டி வைச்சிருக்கான். ஒஸ்தியான சரக்குன்னு எல்லோரும் நினைச்சு வாங்கினாத்தானே போணியாகும். போதாத குறைக்கு ஸ்டிக்கரை வாக்ஸ் (Wax) போட்டு ஒட்டியிருப்பான். அந்த பழத்தை வாங்கினா, அது வேற என்ன பிரச்சினை கொடுக்குமோ?' என்றெல்லாம் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. 

ஆனால் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். 

பார் கோட் ( Bar Code) ஒட்டிய ஸ்டிக்கர் உள்ள பதார்த்தங்களை வாங்கினால், நமக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் அதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.  

உதாரணத்திற்கு, நீங்கள் வாழைப்பழம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.அதன் மேல் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கருக்கு,  P.  L. U. அதாவது, 'பிரைஸ் லுக் அப்’ நம்பர் என்று பெயர். 

பொதுவாக இவை நான்கு அல்லது ஐந்து எண்களைக் கொண்டதாக இருக்கும். (பன்னிரெண்டு எண்கள் கொண்ட கோட் உண்டு. இந்த மாதிரி விஷயங்களுக்கு அது பொருந்தாது.) 

பழத்தின் மேல் நான்கு டிஜிட் எண்  மட்டும் 4011 என்று இருந்தால், (வாழைப்பழத்தின் கோட் எண் 4011) இயற்கையாக விளைந்தது என்று அர்த்தம். நான்கிற்கு முன்பு ஒரு எண் சேர்ந்து 84011 என்று இருந்தால், இயற்கையாக அல்லாமல், செயற்கை முறையில் (மரபியல் மாறி) விளைந்தது என்று பொருள். நான்கிற்கு முன்பு, 9 என்கிற எண் சேர்த்து, 94011 என்று இருந்தால், ஆர்கானிக் பண்டம் என்று அர்த்தம். 

I F P S (International Federation for Produce Standards) மூலம் பெறப்படும், இந்த உணவுப் பண்டங்களுக்குண்டான கோட் எண்களை 1990 முதல் உலகளாவிய முறையில், கடைகளில், உபயோகப்படுத்தி வருகிறார்கள். அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரில் உள்ள மெழுகு, உண்ணப்பட்டு விட்டால், அதனால் எந்த பாதிப்பும் உண்டாகாது (edible gum). ஆகையால், தேவையான தின்பண்டங்களை, தெளிவுடன் வாங்கி சாப்பிடுங்கள். 

- மாலதி சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT