உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: நேந்திரம் பழம்

தொடர் இருமல் குணமாக

தினமணி


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


நேந்திரம் பழம்:

  • காசநோய் குணமாக நேந்திரம் பழம் (1) , முட்டை (1)இவை இரண்டையும் தினந்தோறும்  காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தால் காசநோய் குணமாகி உடல் ஆரோக்கியமாகும்.
  • குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அதிகரிக்க நன்றாகப் பழுத்த நேந்திரப் பழத்தை நறுக்கி அதனுடன் சிறிது உப்பைப் போட்டு வேகவைத்து நன்றாக பிசைந்து ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்து வந்தால் உடலுக்கு நல்ல ஊட்டச் சத்து கிடைக்கும். குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.
  • தொடர் இருமல் குணமாக நன்றாக பழுத்த நேந்திரம் பழத்துடன் கால் ஸ்பூன் மிளகு பொடியை கலந்து தினந்தோறும் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தொடர் இருமல் சரியாகும்.
  • மெலிந்த உடல் குண்டாக நன்கு கனிந்த நேந்திரம் பழத்தை சிறுசிறு துண்டுகளாக்கி இட்லி வேக வைப்பதுபோல அவித்து இதனுடன் நெய்யை கலந்து 40 நாட்களுக்கு காலை உணவாக உடல் மெலிந்தவர்கள்  சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் பூஷ்டியாகும்.
  • இதயம் வலிமை பெற நேந்திரம் பழம் இதயத்தின் வலிமைக்கு  மிகவும் சிறந்தது. ஆகவே கிடைக்கும் போது நேந்திரம் பழத்தை தவறாமல் சாப்பிட்டு வாருங்கள். இதய நோய் வராமல் பாதுகாக்கலாம், மேலும் இருதயம் சீராக செயல்படுவதற்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பழமாகும்.
  • மாணவர்களின் மூளை சுறுசறுப்பு அடைய நேந்திரம் பழம் சாப்பிடுவதால் மூளையின் செல்கள் பலப்பட்டு  நினைவு ஆற்றல் பெருகும், மாணவர்களுக்கு பரீட்சை நேரத்தில் சாப்பிடுவது நல்லது. பரீட்சை அன்று சாப்பிடாமல் செல்லும் குழந்தைகள் நேந்திர வாழைப்பழத்தை சாப்பிட்டு சென்றால் பசியும் அடங்கும், மூளையும் சுறுசுறுப்புடன் இருக்கும்.


KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT