உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்

சீரற்ற இதயத்துடிப்பு

தினமணி

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

  • வயிற்றுப் போக்கு குணமாக ஜாதிக்காய் பொடியை (அரைகிராம்) அளவு எடுத்து பாலில் கலந்து தினந்தோறும் மூன்று வேளையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு தீரும் .
  • ஜாதிக்காய் தூள் (10 கிராம்) அளவு எடுத்து வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால்  அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு தீர்ந்து விடும்.
  • சீரற்ற இதயத்துடிப்பு சீராக இயங்க ஜாதிக்காய் (5 கிராம்) பொடி எடுத்து அதனுடன் புதிதாக நெல்லிக்காய்ச் சாறு அரைத்து  ஒரு மேஜைக் கரண்டியளவு எடுத்து இரண்டையும் இரவு வேளை  கலந்து சாப்பிட்டு வந்தால்  அதிமறதி, விக்கல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு ஆகியவை குணமாகும்.
  • முகம் பொலிவாக மாற ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும் , முகம் பொலிவடையும்.
  • அம்மை கொப்பளங்கள் மறைய ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை பொடி செய்து வைத்துக் கொண்டு அம்மை நோயின் போது உணவிற்கு முன் (5 கிராம்) அளவு எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும்.
  • நாவறட்சி குணமாக ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist

Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT