உணவே மருந்து

கடும் இருமலை குணப்படுத்தும் பழம் இது!

தினமணி

உலர்ந்த மாதுளையின் மொக்கை இடித்துத் தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கடும் இருமல் தோன்றினால் ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டு கொஞ்சம் நீர் அருந்த வேண்டும். உடனே குணம் தெரியும்.

உலர்ந்த மாதுளம் பூத்தூளை ஒரு தேக்கரண்டி எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி சீக்கிரமாகச் சரியாகிவிடும். .

சீரகத்தோடு, உலர்ந்த மாதுளம் பூவைச் சேர்த்து, மண் சட்டியிலிட்டுப் பொன் வறுவலாக வறுத்துக் கொள்ள வேண்டும். இதனை இடித்து நன்கு தூளாக்கி வஸ்திர காயம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சூரணத்தில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் மூல வாயு மாறும். உஷ்ணத்தில் தோன்றக்கூடிய பேதியும் குணமாகும்.
 (இயற்கை மருத்துவக் கூட்டமொன்றில் கேட்டது)
 - மா.உலகநாதன்,
 திருநீலக்குடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT