உணவே மருந்து

இரும்புச் சத்து குறைபாடுகளை தீர்க்கும் இட்லிப் பொடி

ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் பெருங்காயத்தைப் பொரித்துக் கொள்ளவும்.

கோவை பாலா

புளிச்சக் கீரை இட்லிப் பொடி

தேவையான பொருட்கள்

புளிச்சக் கீரை - 200 கிராம்
மிளகு - 10 கிராம்
பெருங்காயம் - ஒரு துண்டு
உளுந்தம் பருப்பு - 100 கிராம்
பூண்டு - 10 பல்
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் பெருங்காயத்தைப் பொரித்துக் கொள்ளவும். பின்பு உளுந்தம் பருப்பையும் வறுத்துக் கொள்ளவும். புளிச்சக் கீரையைப் பொடியாக அரிந்து வாணலியில் போட்டு வறுக்கவும். வறுத்த கீரையையும் மிளகையும் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். பொடி செய்து வைத்துள்ள கீரையுடன் வறுத்து வைத்துள்ள உளுந்து, பெருங்காயம் மற்றும் பூண்டு, உப்பு ஆகியவற்றை லேசாகத் தட்டி கீரையுடன் சேர்த்து கலக்கினால் இட்லிப் பொடி தயார்.

பயன்கள் : இந்த புளிச்சக் கீரை இட்லிப் பொடியை இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்கள் உண்ணக் கூடிய இட்லி மற்றும் தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட்டு வந்தால் இரும்புச் சத்து குறைபாடு நீங்கும்

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயிலர் - 2 படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு!

இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

தில்லி பயங்கரம்! ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை! இளைய மகனைத் தேடும் போலீஸ்

“தலைவர பக்கத்துல பாக்கதான் வந்துருக்கோம்!” தவெக தொண்டர்கள் பேட்டி! | Madurai | Vijay

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

SCROLL FOR NEXT