முகப்பு
இந்தியா

குறைந்த விலையில் உணவு திட்டம்: ஒடிசாவில் விரிவுபடுத்த திட்டம்

ஏழைகளுக்காக மிகக் குறைந்த விலையில் உணவை அளிக்கும் 'ஆஹார்' திட்டத்தை ஒடிஸாவின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், தொழிற்நிலையங்களிலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Updated On : 31 அக்டோபர், 2015 at 4:01 PM
பகிர்:

ஏழைகளுக்காக மிகக் குறைந்த விலையில் உணவை அளிக்கும் 'ஆஹார்' திட்டத்தை ஒடிஸாவின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், தொழிற்நிலையங்களிலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தொழிற்நிலையங்கள் அருகே தகுதிவாய்ந்த கொடையாளர்கள் மூலமாக ஆஹார் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.