முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் 3ம் கட்ட தேர்தல்: பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சம் வீரர்கள்

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவுக்கு சுமார் 1 லட்சம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Updated On : 20 ஏப்ரல், 2016 at 3:52 PM
பகிர்:

கொல்கத்தா : மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவுக்கு சுமார் 1 லட்சம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

75 ஆயிரம் மத்திய துணை ராணுவத்தினர், 700 தொழிற்படையினர் என சுமார் 1 லட்சம் வீரர்கள் மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடபடுத்தப்பட்டுள்ளனர்.

பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில், அதிக அளவில் பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி, வாக்களிக்க செய்ய, அதிக அளவில் வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

இவர்களுடன், அம்மாநில காவல்துறையினரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவர்கள் வாக்குச்சாவடிக்கு அருகே பணியமர்த்தப்படவில்லை என்றும், ஏதேனும் தவிர்க்க முடியாத காரணத்தைத் தவிர இவர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழைய முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.