முகப்பு
இந்தியா

சி.பி.ஐ இயக்குனராக நியமிக்கப்பட்ட அஸ்தானாவுக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

சி.பி.ஐயின் இடைக்கால இயக்குனராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை வரும் வெள்ளியன்று விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒத்துக் கொண்டுள்ளது. 

Dinamani
Updated On : 24 ஜனவரி, 2024 at 6:52 PM
பகிர்:

புதுதில்லி: சி.பி.ஐயின் இடைக்கால இயக்குனராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை வரும் வெள்ளியன்று விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒத்துக் கொண்டுள்ளது. 

சி.பி.ஐயின் இயக்குனராக இருந்த அனில் சின்ஹா கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஓய்வு பெற்றதை அடுத்து      இடைக்கால இயக்குனராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் இந்த நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி தில்லியை சேர்ந்த 'காமன் காஸ் ' எனப்படும் அரசு சாரா நிறுவனம் ஒன்று, உச்ச நீதி மன்றத்தில் இன்று பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது. 

மனுதார சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரணவ் சச்தேவா, 'இந்த நியமனத்தில் பல நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.குறிப்பாக சி.பி.ஐயின் முன்னாள் சிறப்பு இயக்குநராக இருந்த ஆர்.கே.தத்தாவை உள்துறைக்கு மாற்றம் செய்து, அதன் மூலம் அஸ்தானாவுக்கு வழி ஏற்படுத்தியது போன்ற விஷயங்களை அவர் குறிப்பிட்டார். மேலும் வழக்கை    விரைந்து விசாரிகுமாறும் அவர் கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி டி .எஸ்.தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் வழக்கை வரும் வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக அறிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →