முகப்பு
இந்தியா

ஆபாச டேப் விவகாரம்: கர்நாடக அமைச்சர் ராஜிநாமா!

பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச டேப் வெளியான விவகாரத்தில்  கர்நாடக மாநில கலால் துறை அமைச்சர் ஹெச் .ஒய்.மெடி தன்னுடைய பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

Dinamani
Updated On : 14 டிசம்பர், 2016 at 2:06 PM
பகிர்:

பெங்களூரு: பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச டேப் வெளியான விவகாரத்தில்  கர்நாடக மாநில கலால் துறை அமைச்சர் ஹெச் .ஒய்.மெடி தன்னுடைய பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் கலால் துறை அமைச்சராக இருப்பவர் ஹெச் .ஒய்.மெடி(70). இவர் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச டேப் ஒன்று சமீபத்தில் வெளியானது. உள்ளூர் தொலைக்காட்சி செய்தி சேனல்களில் இந்த காட்சிகள் வெளியானதும் விவகாரம் பரபரப்பானது. அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

இந்நிலையில் மெடி முதலவர் சித்தராமையாவை அவருடைய இல்லத்தில் இன்று சந்தித்து தன்னுடைய ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்தார். மெடியின் ராஜிநாமா கடிதம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.