முகப்பு
இந்தியா

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு: முன்னாள் விமானப்படை தளபதிக்கு ஜாமீன்! 

அகஸ்ட்டா வெஸ்ட்லாண்ட் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்த விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகிக்கு ஜாமீன் வழங்கி ...

Dinamani
Updated On : 24 ஜனவரி, 2024 at 7:00 PM
பகிர்:

புதுதில்லி: அகஸ்ட்டா வெஸ்ட்லாண்ட் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்த விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகிக்கு ஜாமீன் வழங்கி தில்லி சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.  

இத்தாலியின் அகஸ்ட்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர் வாங்கும் விவகாரத்தில் , ரூ.3600 கோடி லஞ்சம் பெற்றதாக, இந்திய விமானபடையின் முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி மீது குற்றம் சுமத்தப்பட்டது. பின் அவர் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தியாகி தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று தில்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.   அவரது மனுவை ஏற்றுக் கொண்டு ஜாமீன் வழங்கிய சி.பி.ஐ நீதிபதி அர்விந்த் குமார், விமானப்படை தளபதி தியாகியை ரூ.2 லட்சத்திற்கான தனிநபர் பிணை ஒப்பந்தம் மற்றும் அதே அளவுக்கான காப்பு தொகையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.