இந்தியாவின் மீது பயங்கரவாதிகள் துல்லிய தாக்குதல் நடத்துவார்கள்: மிரட்டும் ஹபீஸ் சயீத்!
எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்தியா மீது பங்கரவாதிகள் துல்லிய தாக்குதலை நடத்துவார்கள் என்று பாகிஸ்தான் தீவிரவாதியான ஹபீஸ் சயீத் மிரட்டல் விடுத்துள்ளான்.
இந்தியாஇந்தியாவின் மீது பயங்கரவாதிகள் துல்லிய தாக்குதல் நடத்துவார்கள்: மிரட்டும் ஹபீஸ் சயீத்!
எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்தியா மீது பங்கரவாதிகள் துல்லிய தாக்குதலை நடத்துவார்கள் என்று பாகிஸ்தான் தீவிரவாதியான ஹபீஸ் சயீத் மிரட்டல் விடுத்துள்ளான்.
புதுடெல்லி: எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்தியா மீது பங்கரவாதிகள் துல்லிய தாக்குதலை நடத்துவார்கள் என்று பாகிஸ்தான் தீவிரவாதியான ஹபீஸ் சயீத் மிரட்டல் விடுத்துள்ளான்.
பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கம் லஷ்கர் இ தொய்பா. இதன் நிறுவனர் ஹபீஸ் சயீத். இவன்தான் மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவனாவான். இவன் இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மிர்புரில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினான். அப்போதுஅவன் கூறியதாவது;
இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்யய வேண்டும் என்று நினைத்தாரோ, அதனை செய்துள்ளார். இப்போது காஷ்மீர் விடுதலைக்காக போராடுபவர்கள் பதில் தாக்குதல் நடத்துவதற்கான முறை. அதன்படி காஷ்மீரில் திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்படும். அவர்கள் நடத்த உள்ள இந்த தாக்குதலை நீண்ட நாளைக்கு இந்தியாவால் மறக்கமுடியாது.
இவ்வாறு சயீத் பேசியுள்ளான்.
ஐ.நா. வால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு உள்ள ஹபீஸ் சயீத்தின் தலைக்கு அமெரிக்கா 1 கோடி அமெரிக்க டாலரை பரிசாக நிர்ணயித்துள்ளது. ஆனால் சயீத் இன்று வரை பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டு, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.