நாடாளுமன்றத்தை சந்திக்க அஞ்சும் பிரதமர்: கெஜ்ரிவால் கடும் தாக்கு!
ருபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தை சந்திக்க அஞ்சி பிரதமர்: மோடி தவிர்க்கிறார் என்று அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுதில்லி: ருபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தை சந்திக்க அஞ்சி பிரதமர்: மோடி தவிர்க்கிறார் என்று அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் வேளையில் ருபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்றும், அதில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனால் எழுந்துள்ள பிரச்சினைகளினால் நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் தவித்து வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் மோடியின் செயல்பாடுகளை தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் காட்டமாக விமர்சித்துள்ளார்.அவர் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில், 'நாடாளுமன்றத்திற்கு செல்லுமாறு பிரதமருக்கு ஜனாதிபதி அறிவுறுத்த வேண்டும். நாடாளுமன்றத்தை சந்திக்க அஞ்சும் முதல் பிரதமர் இவர்தான்' என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.