பிரதமர் இல்லாததால் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பான விவாதத்தின் போது மாநிலங்களவையில் பிரதமர் இல்லாததால் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
Updated On : 25 ஜனவரி, 2024 at 3:45 PM
புது தில்லி: பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பான விவாதத்தின் போது மாநிலங்களவையில் பிரதமர் இல்லாததால் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
பழைய ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் நடைபெற்ற விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். ஆனால், உணவு இடைவேளைக்குப் பிறகு மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இல்லாததால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.