ராணுவ வீரர்களின் தியாகத்தினால்தான் நாம் நிம்மதியாக உறங்க முடிகிறது: பிரதமர் மோடி
நாட்டைக் காக்கும் பணியில் நமது முப்படை வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்வதால்தான் நம்மால் நிம்மதியாக உறங்க முடிகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
போபால்: நாட்டைக் காக்கும் பணியில் நமது முப்படை வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்வதால்தான் நம்மால் நிம்மதியாக உறங்க முடிகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காகப் போரிட்டு தங்கள் உயிரை நீத்த ராணுவ வீரர்களைக் கெளரவிக்கும் வகையில், போர் வீரர்கள் நினைவிடம் ஒன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் கட்டப்பட்டுள்ளது. போபாலில் 12.67 ஏக்கர் பரப்பளவில், ரூ.41 கோடி செலவில் இந்த நினைவிடம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை இன்று திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது.
ஸ்ரீநகரில் கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது ராணுவத்தினர்தான் மீட்பு பணியில் ஈடுபட்டு பெரும்பாலான மக்களை மீட்டனர். அப்பொழுது உதவி செய்யும் போது ஸ்ரீநகர் மக்கள் தானே நம்மீது கல் எறிந்தார்கள் என்று ஒரு போதும் ராணுவத்தினர் நினைக்கவில்லை.அதேபோல் உள்நட்டு போர் சமயத்தில் ஏமனில் சிக்கித்தவித்த இந்தியர்களுடன் சில பாகிஸ்தானியர்களையும் இந்திய ராணுவம் மீட்டது. ராணுவத்தினரின் மனிதாபிமானத்திற்கு ஆகச்சிறந்த சான்று இதுதான்.
ஐநா அமைதிப்படைக்கு அதிக அளவில் படைபணிகளை வழங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. நமது ராணுவத்தின் முன் இந்தியர்கள் அனைவரும் சமம்தான். இயற்க்கை பேரிடர்களின் போது ராணுவ வீரர்களின் வீரம் மற்றும் அவர்கள் செய்த உதவிகளை நினைத்து பார்க்க வேண்டும்
இப்படிப்பட்டராணுவத்தினர் பயன் பெறும் வகையில்ர 'ஒரே பதவி; ஒரே ஒய்வூதியம்' திட்டத்தை கொண்டு வந்தது பாஜக அரசுதான். ராணுவம், எல்லைப்பாதுகாப்பு படை, கடற்படை போன்ற படைகளின் வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்வதன் காரணமாகத்தான் நம்மால் நிம்மதியாக உறங்க முடிகிறது.
இரண்டு உலக மகா யுத்தங்களின் போதும் இந்திய வீரர்கள் .5 லட்சம் தங்கள் உயிரை இழந்தனர். உலகம் இதை ஒருபோதும் மறக்காது.ராணுவம் தனது செயல் குறித்து எப்போதும் வெறும் பேச்சுக்களை பேசாது; நடவடிக்கையில் மட்டுமே காட்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.