முகப்பு
இந்தியா

பாகிஸ்தானில் பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்து: 27 பேர் பலி

பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Dinamani
Updated On : 24 ஜனவரி, 2024 at 6:29 PM
பகிர்:

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ரஹிம் யார்கான் மாவட்டத்தில் கான்பூர் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கராட்சியில் இருந்து பஹவல்பூர் செல்லும் பேருந்தும், சாதிக்பாத்தில் இருந்து பைசலாபாத் வந்துகொண்டிருந்த பேருந்தும் ஒன்றோடொன்று பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 65-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →