காங். முன்னாள் அமைச்சர் அகிலேஷ் தாஸ் குப்தா காலமானார்: மோடி இரங்கல்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் அகிலேஷ் தாஸ் குப்தா உடல்நலக் குறைவு காரணமாக காலமானர். குப்தா மறைவிற்கு பிரதமர்
புதுதில்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் அகிலேஷ் தாஸ் குப்தா உடல்நலக் குறைவு காரணமாக காலமானர். குப்தா மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் பாபு பானரசி தாஸின் மகனுமான அகிலேஷ் தாஸ் குப்தா நெஞ்சுவலி காரணமாக இன்று காலமானார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் ஆட்சியில் அகிலேஷ் தாஸ் குப்தா மத்திய இரும்புத் துறை இணையமைச்சராக இருந்தார். லக்னோ நகர மேயராகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார்.
தாஸ் குப்தாவின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இரங்கல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், முன்னாள் எம்.பி. மற்றும் முன்னாள் அமைச்சர் அகிலேஷ் தாஸ் குப்தாவின் மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது அற்பணிப்புமிக்க பொதுவாழ்க்கை நீண்ட காலம் நினைவுகூறப்படும் என்று தெரிவித்துள்ளார்.