இந்தியா

நான்கு ஜி.எஸ்.டி சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் ஒப்புதல்!

DIN

புதுதில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்  நிறைவேற்றப்பட்ட நான்கு ஜி.எஸ்.டி சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

சுதநதிர இந்தியாவின் மிக முக்கிய வரி சீர்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) மசோதாவானது சமீபத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதனை நாடு முழுவது அமல் செய்வதற்கு வசதியாக நான்கு விதமான துணை மசோதாக்களும் இரண்டு அவைகளிலும் சட்டங்களாக நிறைவேற்றப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அந்த நான்கு ஜி.எஸ்.டி சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.  

இதனை அடுத்து மத்திய அரசின் திட்டப்படி வரும் ஜுலை ஒன்றாம் தேதி முதல் இந்தியா முழுமைக்கும் சரக்கு மற்றும் சேவை வரியானது (ஜி.எஸ்.டி)  அமலுக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT