கடும் விமரிசனம்: சில ஏசி ரயில்களுக்கு போர்வை வழங்கும் வசதியை நிறுத்த ரயில்வே முடிவு
ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகளை துவைப்பதே இல்லை என்ற கடுமையான விமரிசனத்தை எதிர்கொண்ட ரயில்வே நிர்வாகம், சில ஏசி ரயில்களில், போர்வை கொடுக்கும் வசதியை நிறுத்த முடிவு செய்துள்ளது.
இந்தியாகடும் விமரிசனம்: சில ஏசி ரயில்களுக்கு போர்வை வழங்கும் வசதியை நிறுத்த ரயில்வே முடிவு
ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகளை துவைப்பதே இல்லை என்ற கடுமையான விமரிசனத்தை எதிர்கொண்ட ரயில்வே நிர்வாகம், சில ஏசி ரயில்களில், போர்வை கொடுக்கும் வசதியை நிறுத்த முடிவு செய்துள்ளது.
புது தில்லி: ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகளை துவைப்பதே இல்லை என்ற கடுமையான விமரிசனத்தை எதிர்கொண்ட ரயில்வே நிர்வாகம், சில ஏசி ரயில்களில், போர்வை கொடுக்கும் வசதியை நிறுத்த முடிவு செய்துள்ளது.
ரயில்களும், ரயில் நிலையங்களும் தூய்மையானதாக இல்லை என்றும், ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் அறிவுறுத்தல்படி துவைக்கப்படுவதில்லை என்றும் சிஏஜி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருந்தது.
இதையடுத்து, போர்வைகளைத் துவைக்கவும், துவைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, சில ரயில் பெட்டிகளுக்கு வழங்கப்படும் போர்வை வசதியையே நிறுத்திவிட முடிவெடுத்துள்ளது.
அதாவது, ரயில்களின் ஏசி பெட்டிகளில் தற்போதிருக்கும் 19 டிகிரி சென்டிகிரேட் என்ற அளவை இனி 24 டிகிரி சென்டிகிரேட் என்ற அளவுக்கு மாற்றி, பயணிகளுக்கு குளிராமல் இருக்கும்படி செய்தால், அவர்களுக்கு போர்வை வழங்க வேண்டிய அவசியம் இருக்காது என்ற திட்டத்தை சோதனை முறையில் சில ரயில்களில் பரீட்சித்துப் பார்க்க திட்டமிட்டுள்ளது.
அதாவது ஏசி வகுப்பில் பயணிக்கும் ஒரு பயணியிடம், போர்வை போன்றவற்றை சுத்தப்படுத்த ரூ.22 கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், போர்வைகளை சுத்தப்படுத்த ரூ.55 அளவுக்கு செலவாகிறது. எனவே இந்த செலவைக் குறைக்கவே போர்வைகள் வழங்குவதை நிறுத்தவிருப்பதாக ரயில்வே கூறுகிறது.
துவைத்தால்தானே ரூ.55 செலவாகும். துவைக்காத போர்வைக்கு எப்படி ரூ.55 செலவாகும். வாங்கும் ரூ.22ம் கூட லாபம்தானே என்கிறார்கள் சமூக தளங்களில் கருத்துக் கூறும் சாமானியர்கள்.