நோட்டாவுக்கு வாக்களிக்கும் எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரி காங்கிரஸ் வழக்கு
மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புது தில்லி: மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நோட்டாவுக்கு வாக்களிக்கும் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு சாதகமாக நடந்து கொள்வதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் இந்த வழக்கைத் தொடுத்துள்ளது.
மேலும், குஜராத் மாநில எம்எல்ஏக்களிடம் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடலாம் என்ற அச்சத்தில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேர் பெங்களூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலங்களவைத் தேர்தல் வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் அமித் ஷா, ஸ்மிருதி இராணி, பல்வந்தர்சிங்ராஜ்புத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அகமது பட்டேல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.