முகப்பு
இந்தியா

நீட் தேர்வு கேள்வித்தாள் விவகாரம்: உச்சநீமன்றம் அதிரடி உத்தரவு!

பிராந்திய மொழிகளில் 'நீட்' தேர்வு கேள்வித்தாள் அளிக்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

புதுதில்லி: பிராந்திய மொழிகளில் 'நீட்' தேர்வு கேள்வித்தாள் அளிக்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. ஆனால் அந்த தேர்வு நடத்தப்பட்ட விதம்  மற்றும் அதன் பின்னால் நடைபெற்ற விவகாரங்கள் கடும் சர்ச்சையினை ஏற்படுத்தின.

அதன் காரணமாக தேர்வு முடிவினை வெளியிட தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடியயாக தடை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அந்த வழக்கு இன்று உச்சநீதின்றதில் மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 'நீட்' தேர்வுக்கு பிராந்திய மொழிகளில் கேள்வித்தாள்கள் வழங்கப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மத்திய அரசு மற்றும் மத்திய பள்ளிக்கல்வி வாரியதிற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேவைப்பட்டால் மருத்துவ கவுன்சிலிங் தேதி நீட்டிக்கப்படும் என்றும் நீதிமன்றம் அப்பொழுது தெரிவித்தது 

அத்துடன் 'நீட்' தேர்வினை பிராந்திய மொழிகளில் எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் குறித்த விபரங்களை  சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோரியதால் வழக்கானது ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

முழு கட்டுரையைப் படிக்க →