இந்தியா

லஷ்கர்-இ-தொய்பா தளபதி இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொலை

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதிகளில் ஒருவன் இந்திய ராணுவத்தால் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டான்.

DIN

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு ஜம்மு-காஷ்மீர் எல்லையில் அமைந்துள்ள புல்வாமா என்ற இடத்தில் திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு இந்திய ராணுவத்தில் இருந்து தக்க பதிலடி அளிக்கப்பட்டது. 

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதிகளில் ஆயூப் லேல்ஹாரி என்பவன் இந்திய பாதுகாப்புப் படையால் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டான். இதனை இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், இரு தரப்புக்கும் இடையிலான இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், 3 பயங்கரவாதிகள் வரை இதில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஹர்கத்-உல்-முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா என்ற இடத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சோஃபியன் பகுதியில் சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஹிசாபுல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி யாசின் உட்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஹிஸ்புல் முஜாஹிதீன் காஷ்மீர் பிரிவு தளபதி மெஹமுது கஸ்னவி அதே இடத்தில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இதுபோல சமீபகாலமாக ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் சர்வதேச பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்திய ராணுவம் அவர்களுக்கு தக்க பதிலடி அளித்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காற்றின் தரக் குறியீடு 459 என்ற மோசமான நிலையை எட்டியது!

“சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

மெஸ்ஸியுடன் ராகுல்காந்தி! | Hyderabad

WWE-யிலிருந்து ஓய்வுபெற்றார் John Cena!

இந்து அறநிலையத் துறையில் இளநிலை உதவியாளர் வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

SCROLL FOR NEXT