இந்தியா

ஐவிஆர் மூலம் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முறை!

செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க, அந்தந்த தொலைத் தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்  சேவை மையத்துக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இனி உங்கள் செல்போன் மூலமாகவே அந்த வேலையை செய்து விடலாம்.

DIN


செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க, அந்தந்த தொலைத் தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்  சேவை மையத்துக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இனி உங்கள் செல்போன் மூலமாகவே அந்த வேலையை செய்து விடலாம்.

அதாவது, ஒவ்வொரு செல்போன் நிறுவனத்துக்கும் ஒவ்வொரு ஐவிஆர் எண் கொடுக்கப்படும். நீங்கள் எந்த நிறுவனத்தின் சேவையைப் பெற்றுள்ளீர்களோ அந்த நிறுவனத்தின் ஐவிஆர் எண்ணுக்கு நீங்கள் அதே நிறுவனத்தின் சிம்கார்டில் இருந்து அழைப்பை மேற்கொள்ள வேண்டும்.

நீங்கள் ஐவிஆர் எண்ணுக்கு அழைக்கும் போது அங்கு பதிவு செய்யப்பட்ட குரல் ஒலிக்கும்.

அது, உங்கள் செல்போன் எண்ணைப் பதிவு செய்யச் சொல்லும். 

அந்த எண்ணுக்குத் தொடர்புடைய ஆதார் எண்ணை இணைப்பதற்கான பரிந்துரை UIDAIக்கு அனுப்பப்பட்டு, உங்களுக்கு ஒரு ஓடிபி வரும்.

உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண்ணுக்கு தான் இந்த ஓடிபி அனுப்பி வைக்கப்படும்.

நீங்கள் சரியான ஓடிபியை பதிவு செய்ததும், வாடிக்கையாளரைப் பற்றிய தகவல்களை தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு UIDAI அனுப்பும். 

செல்போன் நிறுவனத்திடம் இருக்கும் தகவல்களும், UIDAI அனுப்பும் தகவல்களும் ஒன்றாக இருப்பின் செல்போன் என் பரிசோதிக்கப்பட்டதற்கான தகவல் வரும். உறுதி செய்யப்பட்டதற்கான தகவல் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

எனவே, வாடிக்கையாளர் சேவை மையத்துக்குச் செல்லாமலேயே இருந்த இடத்தில் இருந்து கொண்டே செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT