முகப்பு
இந்தியா

சர்ச்சைக்குரிய சட்டத்தின் வாயிலாக திரும்பப் பெறப்பட்ட உ.பி முதல்வருக்கு எதிரான 22 வருட வழக்கு! 

கடந்த வாரம் உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒன்றின் வாயிலாக, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான 22 வருட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டியிருப்பது... 

Updated On : 27 டிசம்பர், 2017 at 6:34 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:57 PM

லக்னௌ: கடந்த வாரம் உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒன்றின் வாயிலாக, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான 22 வருட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டியிருப்பது சர்ச்சையினைக் கிளப்பி இருக்கிறது.   

உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் கடந்த வாரம் புதிய சட்டம் ஒன்று நிறைவேற்றபட்டது. அதன்படி அம்மாநில அரசியல்வாதிகளுக்கு எதிராக நெடுங்காலமாக நிலுவையில் இருக்கும் சாதாரண வழக்குகளில் இருந்து, அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

நாட்டிலேயே அரசியலுக்கும் குற்றச் செயல்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இந்தச் சட்டம் சர்ச்சைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக அரசியல்வாதிகளுக்குஎதிரான 20000 வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று தெரிகிறது. ஆனால் இந்த வழக்குகள் அனைத்தும் சாதாரணமான வழக்குகளென்றும், ஆபத்தான வழக்குகள் இல்லை என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் விளக்கமளித்தார்.

Advertisement

இந்நிலையில் இந்த புதிய சட்டத்தின்படி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான 22 வருட வழக்கு ஒன்றில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். 1995-ஆம் ஆண்டு அவரது சொந்த தொகுதியான கோரக்பூரில் ஊரடங்கு உத்தரவினை மீறியதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்குதான் அது. இந்த வழக்கில் நிதியமைச்சர் சிவ பிரதாப் சுக்லா மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் ஷீத்தல் பாண்டே இருவரும் இதர குற்றவாளிகள் ஆவார்கள்.

இந்த சட்ட விவாகாரத்தில் முதல்வரின் கருத்தினை ஏற்காத முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் சிங் யாதவ், '  தற்பொழுது முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இது துவங்கியுள்ளது. இனி மற்ற அரசியல்வாதிகளும் தாங்களும் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுவோம் என்று எதிர்பார்ப்பார்கள். இது சாதாரண வழக்குகளுக்கு மட்டுமா அல்லது கடுமையான வழக்குகளிலும் விடுவிப்பு இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும என்று தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே சட்டம் இயற்றும் பொறுப்பில் உள்ளவர்கள் மீது அதிகமான கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது உத்தரப்பிரதேசத்திதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.