இந்தியா

மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது எது தெரியுமா?       

நாட்டின் தில்லி, மும்பை உள்ளிட்ட ஆறு மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: நாட்டின் தில்லி, மும்பை உள்ளிட்ட ஆறு மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

நாட்டில் நிகழும் பதிவு செய்யப்பட்ட குற்றங்களில் விபரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பராமரித்து வருகிறது. அந்த காப்பகத்தில் இருந்து தொகுக்கப்பட்ட விபரங்களின் அடிப்படையில் ஆய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகிறது.        

அதன்படி தில்லி,மும்பை, சென்னை. கொல்கத்தா. பெங்களூரு மற்றும் லக்னௌ ஆகிய ஆறு மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் ஆய்வு செய்து சில தரவுகளை காப்பகம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி குறிப்பிட்ட ஆறு மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு காரணமாக இங்கு பெண்களுக்கு எதிராக குறைந்த வழக்குகள் பதிவாகியுள்ளது காட்டப்படுகிறது. அதே நேரத்தில் தமிழக காவல்துறையின் சிறப்பான வழக்கு விசாரணை முறையும் பாராட்டப்படுகிறது.

அதேபோல பெண்களுக்கு எதிராக மிக அதிக அளவில் வழக்குகள் பதிவாகியுள்ளதன் காரணமாக, பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற நகரமாக தில்லி சுட்டிக்காட்டப்படுகிறது.     

முன்னதாக நாட்டிலேயே அதிக அளவில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதாக தமிழ்நாடு செவ்வாயன்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அகழாய்வு தளத்தைப் பார்வையிட்ட முதல்வர் Stalin!

பூண்டி வெள்ளியங்கிரி கோயிலில் பக்தர்களை அலறவிட்ட ஒற்றை யானை!

விஜய் அரசியலில் நடிக்க அமித் ஷாவுடன் ஒப்பந்தம்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மல்லிகார்ஜுன கார்கே!

மழையினால் கைவிடப்பட்ட 2-ஆவது டி20: 8 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் ஆஸி.!

SCROLL FOR NEXT