முகப்பு
இந்தியா

மத்திய பட்ஜெட்: 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!

தற்போது அறிவிக்கப்பட்டு   வரும் 2017-18 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது...

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:52 AM
பகிர்:

புதுதில்லி: தற்போது அறிவிக்கப்பட்டு வரும் 2017-18 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் ஜேட்லி அரசின் ஒருங்கிணைந்த நிதி நிலை அறிக்கையை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.அதில் அவர் தெரிவித்ததாவது:

2017-18 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இது கடந்த ஆண்டில் ரூ.38,500 கோடியாக இருந்தது. இது  கடந்த ஆண்டை விட 25% அதிகமாகும்.

அதேபோல் 100 நாள் வேலைத் திட்டத்தில் மகளிரின் பங்களிப்பு 55% ஆக உயந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →