முகப்பு
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: ராணுவ வீரர்கள் உட்பட நால்வர் பலி! 

ஜம்மு காஷ்மீரில் ராணுவ ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர்கள் உட்பட நான்கு பேர் வீர மரணம் அடைந்தனர்.

Updated On : 23 பிப்ரவரி, 2017 at 1:34 PM
பகிர்:

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர்கள் உட்பட நான்கு பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள  ஷோபியன் மாவட்டத்தில் இன்று அதிகாலை  2.30 மணியளவில் பாதுகாப்புப் படையினர் வழக்கமான ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் 'திடீர்' என்று துப்பாக்கியால் சுட்டு அதிரடி தாக்குதல் நடத்தினர். சுதாரித்துக்கொண்ட ராணுவ வீரர்களும் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தினர்.

கடுமையான துப்பாக்கிச் சண்டையின் இறுதியில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.  உள்ளூரைச்சேர்ந்த ஒரு வயதான பெண்மணியும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அந்த பிரதேசத்தில் அதிகாலை வேளையில் நிலவிய அடர்ந்த இருட்டை பயன்படுத்தி தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.