மோடி தேநீர் விற்ற கடை சுற்றுலாத் தலமாகிறது!
பிரதமர் நரேந்திர மோடி தனது சிறு வயதில் தேநீர் விற்ற கடையை சுற்றுலாத் தலமாக மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாமோடி தேநீர் விற்ற கடை சுற்றுலாத் தலமாகிறது!
பிரதமர் நரேந்திர மோடி தனது சிறு வயதில் தேநீர் விற்ற கடையை சுற்றுலாத் தலமாக மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தனது சிறு வயதில் தேநீர் விற்ற கடையை சுற்றுலாத் தலமாக மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தின் வட்நகர் ரயில்வே நிலையத்தில் அமைந்துள்ள இந்த தேநீர் விடுதி, அதன் பழமை குன்றாமல் பொலிவுபடுத்தப்படும் என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார்.
நரேந்திர மோடியின் பிறந்த ஊரான வட்நகரை உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெறச் செய்யும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த தேநீர் விடுதி பொலிவுபடுத்தப்படுகிறது.
இதற்கான செயல்திட்டத்தைத் தீட்டுவதற்காக, கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சக அதிகாரிகளும், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகளும் வட் நகருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து பார்வையிட்டனர்.
இதுகுறித்து அமைச்சர் மகேஷ் சர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
நமது பிரதமரின் பிறந்த ஊர் என்பதைத் தவிர, சர்மிஷ்டா ஏரி, படிக் கிணறு ஆகிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களும் வட்நகரில் உள்ளன. பழம்பெரும் புத்த மடாலயத்தின் சிதைவுகளை அண்மையில் தொல்லியல் துறையினர் இந்த நகரில் கண்டறிந்தனர். இதற்கான அகழ்வாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்த நகரின் ரயில் நிலையத்தில், பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்க்கையைத் துவக்கியதாகக் கூறப்படும் தேநீர் விடுதி சுற்றுலாத் தலமாக்கப்படும்.
அந்த விடுதியின் பழம்பெருமைக்கு சிறிதும் குந்தகம் ஏற்படுத்தாமல், நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு பொலிவுபடுத்தப்படும் என்றார் மகேஷ் சர்மா.
ரூ.100 கோடி செலவு: முன்னதாக, பிரதமர் பிறந்த வட்நகரையும், அதனையொட்டிய பகுதிகளையும் சுற்றுலாத் தலமாக்க ரூ.100 கோடி செலவாகும் என்று அகமதுநகர் ரயில்வே மண்டல மேலாளர் தினேஷ் குமார் தெரிவித்தார்.
தற்போது வட்நகர ரயில் நிலையப் பணிகளுக்காக சுற்றுலாத் துறை ரூ.8 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக அவர் கூறினார்.