இந்தியா

லாலு பிரசாத் மீது சிபிஐ புதிய வழக்கு: 12 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை

DIN

மும்பை:  லாலு பிரசாத் யாதவுக்கு சொந்தமான 12 இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத், கடந்த 2006 ஆண்டு ராஞ்சி மற்றும் பூரியில் ஐ.ஆர்.சி.டி.சி. எனப்படும் இந்திய ரயில்வேயின் ஹோட்டல் மற்றும் சுற்றுலா கழகத்துக்கு சொந்தமான ஹாட்டல்களின் மேம்பாடு, பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் தொடர்பான டெண்டர்களை தனியர் ஹோட்டல் நிர்வாகங்களுக்கு கொடுத்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, அவர்களின் மகனும் பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், மற்றும் ஐஆர்சிடிசியின் அப்போதைய நிர்வாக இயக்குநர் தனியார் ஹோட்டல் நிறுவனங்களின் இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி, மகன் மற்றும் ஐஆர்சிடிசி முன்னாள் நிர்வாக இயக்குநர் வீடு, தனியார் நிறுவன இரு இயக்குநர்கள் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தில்லி, பாட்னா, ராஞ்சி, புரி, குர்கான் உள்ளிட்ட 12 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT