குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை தேவையில்லை: தேர்தல் ஆணையம்!
குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க தேவையில்லை என்று வழக்கு ஒன்றில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாகுற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை தேவையில்லை: தேர்தல் ஆணையம்!
குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க தேவையில்லை என்று வழக்கு ஒன்றில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுதில்லி: குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க தேவையில்லை என்று வழக்கு ஒன்றில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்பொழுது நடைமுறையில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள்,அவர்கள் தணடனை பெற்றுள்ள காலம் மற்றும் அதற்குப்பிறகு ஆறு ஆண்டுகளுக்கு என தேர்தலில் போட்டியிட தடை உள்ளது.
ஆனால் குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டுமென்று கோரி, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தலைமை தேர்தல் ஆணையமும் ஒரு மனுதாரராக சேர்க்கப்பட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு தேர்தல் ஆணையம் பதில் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்திருந்தது. அதில் குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு வழக்கினை ஜூலை 18-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.