இந்தியா

ஆளும் அரசு மீது அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் மோடிக்கு முதலிடம்!

ஆளும் அரசு மீது அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.

DIN

புதுதில்லி: ஆளும் அரசு மீது அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் ஆளும் அரசாங்கத்தின்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார்கள்’ என்னும் ஆய்வை சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Organisation for Economic Co-operation and Development ) நடத்தியது.

ஆய்வுக்கான முடிவை பிரபல நாளிதழான போர்ப்ஸ் ’Government at a Glance 2017’ என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது.

அந்த ஆய்வு பட்டியலில் இந்தியா 73 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 73 சதவீத மக்கள் அரசாங்கம் மீது அதிக நம்பிக்கையை கொண்டிருப்பதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தப்படியாக கனடா 62 சதவீதம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. 58 சதவீதத்துடன் துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகள் முறையே மூன்று மற்றும் நான்காவது இடத்தை பெற்றுள்ளன.  

வல்லரசில் வலுவாக உள்ள அமெரிக்கா 30 சதவீதம் பெற்று 10வது இடத்தில் உள்ளது.

13 சதவீதம் பெற்று கடைசி இடத்தில் உள்ள க்ரீஸ் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாளவிகா மோகனன் பிறந்த நாளில் 3 திரைப்பட போஸ்டர்கள்!

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்... அடேங்கப்பா!

அழகே.. ஐஸ்வர்யா மேனன்!

கருப்பில் ஜொலிக்கும் வெண்ணிற தேவதை.. ஸ்ருதி ஹாசன்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT