"நீட்' தேர்வு: மத்திய அரசு நல்ல முடிவை அறிவிக்கும்
"நீட்' தேர்வு குறித்து மத்திய அரசு நல்லதொரு முடிவை அறிவிக்கும் என பாஜக தேசிய பொதுச்செயலரும், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான முரளிதர் ராவ் தெரிவித்தார்.
இந்தியா"நீட்' தேர்வு: மத்திய அரசு நல்ல முடிவை அறிவிக்கும்
"நீட்' தேர்வு குறித்து மத்திய அரசு நல்லதொரு முடிவை அறிவிக்கும் என பாஜக தேசிய பொதுச்செயலரும், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான முரளிதர் ராவ் தெரிவித்தார்.
"நீட்' தேர்வு குறித்து மத்திய அரசு நல்லதொரு முடிவை அறிவிக்கும் என பாஜக தேசிய பொதுச்செயலரும், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான முரளிதர் ராவ் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் மோடி இலங்கையில் இருந்து 77 மீனவர்களையும், 42 படகுகளையும் மீட்டுள்ளார்.
இதனால் மீனவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.
"நீட்' தேர்வை ரத்து செய்வதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கு மத்திய அரசு நல்லதொரு முடிவை அறிவிக்கும். குஜராத் பிரச்னை அம்மாநில விவகாரம். அதுகுறித்து கருத்து கூற முடியாது என்றார்.