மோடி தேநீர் விற்ற ரயில் நிலையம் சுற்றுலா மையமாக மாற்றப்படாது: மத்திய அரசு
பிரதமர் மோடி சிறுவயதில் தேநீர் விற்பனை செய்த ரயில் நிலையத்தை சுற்றுலா மையமாக மேம்படுத்தும் திட்டமில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி சிறுவயதில் தேநீர் விற்பனை செய்த ரயில் நிலையத்தை சுற்றுலா மையமாக மேம்படுத்தும் திட்டமில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மக்களவையில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, திங்கள்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ''குஜராத் மாநிலத்தில் உள்ள வத் நகர் ரயில் நிலையத்தை சுற்றுலா மையமாக மேம்படுத்தும் திட்டமில்லை; அதற்காக, நிதியும் ஒதுக்கப்படவில்லை'' என்றார். பிரதமர் மோடி சிறு வயதில் தேநீர் விற்பனை செய்த வத் நகர் ரயில் நிலையத்தை ரயில்வே துறையுடன் இணைந்து சுற்றுலா மையமாக மேம்படுத்த இருப்பதாக மகேஷ் சர்மா இந்த மாதத் தொடக்கத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில், அப்படி திட்டம் எதுவுமில்லை என்று கூறியிருக்கிறார்.