இந்தியா

மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை: எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபையில்   தீர்மானம்!

DIN

திருவனந்தபுரம்: இறைச்சிக்காக மாட்டினை விற்பனை செய்வதை தடை செய்து சமீபத்தில் மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு  எதிர்ப்பு தெரிவித்து, கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இறைச்சிக்காக பசு, காளை, எருமை, ஒட்டகங்களை விற்கவும் வாங்கவும் தடை விதித்து, பிராணிகள் நல   சட்டத்தில் திருத்தம் செய்து, மத்திய அரசு கடந்த மே 23-ம் தேதி தடை விதித்தது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவு குறித்து விவாதிப்பதற்கு, கேரள சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.  சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு  எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் பினராயி விஜயன் சிறப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். எனவே இந்த தீர்மானம் வெற்றிகரமாக  நிறைவேறியது.

கேரள சட்டசபையில் இடம் பெற்றுள்ள ஒரே ஒரு பாஜக உறுப்பினர் மட்டும் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

SCROLL FOR NEXT