இந்தியா

புலி பசித்தாலும் புல்லை சாப்பிடாது; ஆனால் ஆடு பசித்தால் 66 ஆயிரத்தை சாப்பிடும்

புலி பசித்தாலும் புல்லை சாப்பிடாது என்பது பழமொழி. ஆனால், ஆடு பசித்தால் புல்லை மட்டும் அல்ல 66 ஆயிரம் ரூபாயைக் கூட சாப்பிடும்.

DIN


புது தில்லி: புலி பசித்தாலும் புல்லை சாப்பிடாது என்பது பழமொழி. ஆனால், ஆடு பசித்தால் புல்லை மட்டும் அல்ல 66 ஆயிரம் ரூபாயைக் கூட சாப்பிடும்.

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னௌஜ் மாவட்டத்தில் உள்ள சிலுவாபுர் கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ் குமார். இவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக 66 ஆயிரம் ரூபாயை தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்தார்.

குளிப்பதற்காக செல்லும் போது பேன்டை கழற்றி வைத்துள்ளார். அங்கே வந்த அவரது வளர்ப்பு ஆடு, அவர் வைத்திருந்த 66 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சாப்பிட்டுவிட்டது.

குளித்து முடித்து திரும்பி வந்த சர்வேஷ் குமார், தனது ஆடு எதையோ மென்று தின்று கொண்டிருப்பதையும், அது வெளிர் சிவப்பு நிறத்தில் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து பேன்ட் பேக்கெட்டை பார்த்ததில் அங்கு பணம் இல்லை.

புதிதாகக் கட்டி வரும் வீட்டுக்கு செங்கல் வாங்க வைத்திருந்த 66 ஆயிரத்தை ஆடு தின்றுவிட்டதை அறிந்து சர்வேஷ் மிகுந்த வேதனை அடைந்தார். அதன் வாயில் இருந்து வெறும் 2 ஆயிரம் ரூபாய் ஒன்றை மட்டுமே மீட்க முடிந்தது.

இது குறித்து அவர் கூறுகையில், நான் குளித்து விட்டு வருவதற்குள் என் பேன்ட் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து சாப்பிட்டுவிட்டது. இதற்கு எப்போதுமே பேப்பர் போன்றவற்றை சாப்பிடும் பழக்கம் இருந்தது. என்ன செய்வது, இந்த ஆடும் என் குழந்தையைப் போலத்தான் என்றார் சர்வேஷ்.

பணத்தை சாப்பிட்ட ஆட்டைப் பற்றி அக்கம் பக்கம் கிராமத்தினருக்கு தகவல் பரவியதை அடுத்து, ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக வந்து அந்த ஆட்டையும், 2 ஆயிரம் ரூபாய் மிச்சத்தையும் பார்த்துச் செல்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னல் பார்வை... அவந்திகா மோகன்!

பயணத்தின் தொடக்கம்... ஸ்வக்‌ஷா!

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

SCROLL FOR NEXT