முகப்பு
இந்தியா

ஆகஸ்ட் 5ம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: நஜீம் ஜைதி அறிவிப்பு

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி இன்று அறிவித்தார்.

இந்தியா

ஆகஸ்ட் 5ம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: நஜீம் ஜைதி அறிவிப்பு

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி இன்று அறிவித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:19 PM
பகிர்:


புது தில்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி இன்று அறிவித்தார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நஜீம் ஜைதி, குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் வரும் ஜூலை 10ம் தேதியுடன் முடிவடைகிறது.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 790 பேர் வாக்களிக்களித்து, குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்வார்கள்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலை நடத்தும் அதிகாரியாக, மாநிலங்களவை செயலாளர் ஷம்ஷெர் ஷெரீஃப் செயல்படுவார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும். வேட்பு மனு தாக்கல் ஜூலை 4ம் தேதி தொடங்குகிறது. 18ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். தாக்கல் செய்த வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஜூலை 21 கடைசி நாள். ஆகஸ்ட் 5ம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →