இந்தியா

பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர்:எங்கே போனது 'தூய்மை இந்தியா'?

DIN

புதுதில்லி: பொதுமக்கள் சுகாதாரமாக இருக்க வேண்டியதன் அவசியம் கருதி, அதனை கைக்கொள்ள வேண்டி கோடிக்கணக்கான ரூபாய்களை மத்திய அரசு செலவழித்து வரும் வேளையில், மத்திய அமைச்சர் ஒருவரே பொது இடத்தில் சிறுநீர் கிழித்த விவகாரம் கடுமையான சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.     

மத்திய விவசாயத் துறை அமைச்சராக இருப்பவர் ராதா மோகன் சிங். இவர் பிகாரின் கிழக்கு சம்பரான் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்தெடுக்கப்பட்டவர். இவர் சமீபத்தில் தனது தொகுதியில் உள்ள மோதிஹரி என்ற பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது செல்லும் வழியில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக வழியில் காரிலிருந்து இறங்கியுள்ளார்.  உடனடியாக அருகில் உள்ள சுவரில் சிறுநீர் கழித்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட படம் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் இதற்கு ஆயுதம் ஏந்திய அவரது பாதுகாவலர்கள் இருவர் பாதுகாப்புக்கு நின்றதுதான்.

பிரதமர் மோடி முன்முயற்சி எடுத்து கொண்டு வந்திருக்கும் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் முக்கியமான பகுதியே, 'பொதுவெளியைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்' என்பதுதான்.ஆனால் பொறுப்பான பதவியில் இருக்கும் மத்திய அமைச்சரின் இந்த செய்கை சமுக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும்  கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

அமைச்சர் ராதா மோகன் சிங் சர்ச்சையில் சிக்குவது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாகும். இந்த மாத துவக்கத்தில் மத்திய பிரதேசத்தில் விவசாயிகளின் போராட்டம் நடைபெற்றது. அப்பொழுது துப்பாக்கிச் சூடு நடைபெற்று ஐந்து விவசாயிகள் உயிரிழந்தனர். அத்தகைய பதற்றமான சூழலில், யோகா குரு ராம்தேவுடன், அமைச்சர் ராதா மோகன் சிங் கடந்த எட்டாம் தேதி அன்று, யோகா நிகழ்வு ஒன்றில் பங்கேற்றது கடுமையாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT