முகப்பு
இந்தியா

உத்தர பிரதேசம் ஆறாவது கட்ட சட்டசபை தேர்தல்: 11 மணி வரை 23% வாக்குப்பதிவு!     

இன்று நடைபெறும் உத்தர பிரதேச ஆறாவது கட்ட சட்டசபை தேர்தலில் காலை 11 மணி வரை 23% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Updated On : 4 மார்ச், 2017 at 12:44 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:38 PM

இன்று நடைபெறும் உத்தர பிரதேச ஆறாவது கட்ட சட்டசபை தேர்தலில் காலை 11 மணி வரை 23% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஏழு கட்டமாக நடைபெற்று வரும் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலின் ஆறாவது கட்ட வாக்குப் பதிவு இன்று  நடைபெறுகிறது. 

இந்த ஆறாவது கட்ட தேர்தலில் ஏழு மாவட்டங்களில் உள்ள 49 தொகுகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இதில் 635 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  

Advertisement

அதிகபட்சமாக கோரக்பூர் சிட்டி பகுதியில் உள்ள ஒன்பது தொகுதிகளில் 127 பேரும், குறைந்த பட்சமாக மவு  மாவட்டத்தில் உள்ள முகமதாபாத் கோனா தொகுதியில் ஏழு பேரும் போட்டி போடுகின்றனர். இவர்கள் தவிர 175 சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர்.

இதில் காலை 11 மணி வரை நடைபெற்ற வாக்குபதிவில் மொத்தமுள்ள வாக்குகளில் 23% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.