ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட பட்னோர் லசிபோரா எனும் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து காவல்துறையின் பயங்ரவாத ஒழிப்பு சிறப்பு படையினர் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த பகுதியை இன்று காலை சுற்றிவளைத்தனர்.
அப்போது பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 2 பயங்கரவாதிகள் தப்பியோடிவிட்டனர். தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.