முகப்பு
இந்தியா

ஒரு குறிப்பிட்ட அமைப்பையே குற்றம் சாட்டுவதால் தீர்வு கிடைக்காது

ஒரு குறிப்பிட்ட அமைப்பையே குற்றம் சாட்டிக் கொண்டிருந்தால், பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்காது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:27 PM
பகிர்:

ஒரு குறிப்பிட்ட அமைப்பையே குற்றம் சாட்டிக் கொண்டிருந்தால், பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்காது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
அந்த மாநிலத்தில் வலதுசாரி அமைப்புகள் சட்டத்தைக் கையில் எடுத்து செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவர் இவ்வாறு கூறினார்.
சஹாரன்பூரில் கடந்த மாதம் நடைபெற்ற அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலத்தின்போது இரு சமூகத்தினரிடையே மோதல் மூண்டது. அப்போது இரு தரப்பினரும் கற்களை வீசிக் கொண்டதில் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் லக்கன்பால் சர்மாவும், மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரும் மற்றும் சிலரும் காயமடைந்தனர்.
அதைத் தொடர்ந்து, புலந்த்ஷஹர் மாவட்டத்தில் வேறு பிரிவைச் சேர்ந்த ஆணும் பெண்ணும், பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொள்வதற்காக, ஊரைவிட்டு வெளியேறினர். அவர்களுக்கு உதவி செய்ததாகக் கூறி ஒருவரை ஹிந்து அமைப்பினர் அடித்துக் கொன்றனர். அவரை ஹிந்து யுவ வாஹினி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அடித்துக் கொன்றதாக, உத்தரப் பிரதேச காவல் துறை தெரிவித்துள்ளது. ஹிந்து யுவ வாஹினி அமைப்பு, முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த 2002-ஆம் ஆண்டில் நிறுவிய இளைஞர் அமைப்பாகும்.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் அவரது அமைப்பைச் சேர்ந்தவர்கள், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து, லக்னெளவில் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது யோகி ஆதித்யநாத் அளித்த பதில்:
ஒரு குறிப்பிட்ட அமைப்பையே குற்றம்சாட்ட வேண்டும் என்று ஒருவர் தீர்மானித்து விட்டால், அதற்குத் தீர்வே கிடைக்காது. மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்களே, அது தங்களது தனிப்பட்ட பிரச்னை என்றும், அதற்கும் எந்த அமைப்புக்கும் தொடர்பு இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.
மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். யாராக இருந்தாலும் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் பாதுகாப்புடன் நடத்தப்படுவார்கள் என்பதை உறுதிபடக் கூறுவேன்.
கடந்த ஒன்றரை மாதங்களில் இந்த மாநிலத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை நீங்கள் ஏற்காமல் போகலாம். ஆனால், சட்டத்தின் மீது மக்களின் நம்பிக்கை வளர்ந்திருப்பதை ஒட்டுமொத்த நாடே ஏற்றுக் கொண்டுள்ளது என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →