இந்தியா

மாட்டுத்தீவன ஊழல்: எஞ்சியுள்ள வழக்குகளிலும் லாலுவிடம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

DIN

புதுடில்லி: ரூ.950 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்ற மாட்டுத்தீவன கொள்முதல் வழக்கில், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீதான எஞ்சிய வழக்குகளை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் 1990-97 காலகட்டத்தில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த பொழுது மாட்டுத்தீவன கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ.950 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக லாலுபிரசாத் யாதவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில் மொத்தம் பதிவு செய்ப்பட்ட 64 வழக்குகளில் லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கை விசாரித்த தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013 ஆம் ஆண்டு லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மேலும் ஒரு வழக்கில் மட்டும் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து லாலு பிரசாத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சிபிஐ தரப்பில் லாலுவுக்கு எதிரான சதி குற்றச்சாட்டை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் கைவிட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்ச நீதி மன்றம் இன்று வழங்கியது. அதில் லாலு மீதான குற்றச்சதியை ரத்து செய்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்,  எஞ்சியுள்ள நான்கு வழக்குகளிலும் லாலு மீது மீண்டும் தனித்தனியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை 9 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு லாலுவுக்கு அரசியல் ரீதியிலாக பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT