முகப்பு
இந்தியா

இருவராகக் கைதாகி மூவராக விடுதலையான பாகிஸ்தான் சகோதரிகள்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு அமிருதசரஸ் சிறையில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபாத்திமா மற்றும் அவரது சகோதரி மும்தாஜ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். 

இந்தியா

இருவராகக் கைதாகி மூவராக விடுதலையான பாகிஸ்தான் சகோதரிகள்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு அமிருதசரஸ் சிறையில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபாத்திமா மற்றும் அவரது சகோதரி மும்தாஜ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

அமிருதசரஸ்: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு அமிருதசரஸ் சிறையில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபாத்திமா மற்றும் அவரது சகோதரி மும்தாஜ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். 

அவர்களுடன், சிறையிலேயே பிறந்து சிறையிலேயே கடந்த 11 ஆண்டுகளாக வளர்ந்து வந்த ஃபாத்திமாவின் மகள் ஹினாவும் விடுதலையாகியுள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இவ்விரண்டு பெண்களும் 10 ஆண்டுகளுக்கும் முன்பு கைது செய்யப்பட்டனர். கர்ப்பிணியாக இருந்த ஃபாத்திமாவுக்கு சிறையிலேயே ஹினா பிறந்தார்.

இந்த நிலையில், சிறையில் இருந்து விடுதலையான சகோதரிகள், மகளுடன் அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தான் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எங்களது வழக்குரைஞர் நவ்ஜோத் ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் விடுதலைக்கு உதவிய முழு இந்தியாவுக்கும் நன்றி என்று ஃபாத்திமா கூறினார்.

இதுவரை தனது வீட்டையே பார்த்திராத ஹினா கூறுகையில், நான் என் வீட்டுக்குச் செல்லப் போகிறேன். இதுவரை பார்த்திராத என் தந்தையைப் பார்க்கப் போகிறேன் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்கிறார்.

பாகிஸ்தான் சகோதரிகளின் விடுதலைக்காக போராடி வந்த வழக்குரைஞர் நவ்ஜோத் கௌ சாபா, தனது போராட்டம் வீண் போகவில்லை என்று சந்தோஷப்படுகிறார். மிகப்பெரிய நீண்ட போராட்டத்துக்குப் பிறகே ஹினா விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்காகப் போராடுவதற்குக் காரணமே ஹினா தான். எந்த தவறும் செய்யாமல் அவர் சிறையில் உள்ளார். எனக்கு இன்றுதான் தீபாவளி என்கிறார் வழக்குரைஞர் நவ்ஜோத் தாயுள்ளத்தோடு.

முழு கட்டுரையைப் படிக்க →