இந்தியா

ஜார்க்கண்ட்: பட்டாசு ஆலையில் பயங்கர தீ: 8 பேர் பலி

DIN

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் குமார்துபியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

ஜார்கண்ட் மாநிலம் குமார்துபி பகுதியில் சட்டவிரோதமான முறையில் தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த ஆலையின்  வெடிமருத்து சேமிப்பு கிடங்கு பகுதியில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. இந்த தீயானது மளமளவென பட்டாசுகள் இருக்கும் இடங்கள் உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

இதையடுத்து அப்பகுதியில் பெரும் சப்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதுகுறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டுகடங்காமல் வெடித்து வரும் பட்டாசு தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். 

இந்த தீ விபத்தில் ஆலையில் இருந்த 8 பேர் உடல் கருகி உயிரிழந்ததாகவும், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் 
வெளியாகியுள்ளன.

தீ வேகமாக பரவி வருவதால் அருகிலுள்ள வீடுகளில் உள்ளவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு, இடிபாடுகள் அகற்றப்பட்டால் மட்டுமே பலி எண்ணிக்கை மற்றும் சேத விபரங்கள் துல்லியமாக தெரியவரும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT